சர்ச்சை ஐஏஎஸ் அதிகாரிக்கு அடித்தது லக்: ‘அமைச்சர்’ உதயநிதி துறைக்குச் செயலாளராகிறார்?

சர்ச்சை ஐஏஎஸ் அதிகாரிக்கு அடித்தது லக்: ‘அமைச்சர்’ உதயநிதி துறைக்குச் செயலாளராகிறார்?

உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராகப் பதவி ஏற்க உள்ளார். அவர் வகிக்கும் துறைக்கு புதிய செயலாளராகச் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

முதல்வரின் புதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராகப் பதவி  ஏற்க உள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. ஆளுநர் மாளிகையின் தர்பால் ஹாலில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கோட்டையில் உதயநிதிக்கான தனியறை நிர்மாணிக்கும் பணிகள் இன்று கிட்டத்தட்ட முடிவுற்றுள்ளன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பேற்பதாகச் சொல்லப்படும் நிலையில் சிறப்புத் திட்டச் செயலாக்க துறையும் உதயநிதியைச் சேர இருக்கின்றன. திமுக ஆட்சி அமைந்ததிலிருந்தே, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்த பேச்சுக்கள் எழுந்தன. எம்எல்ஏவாக இருந்து கொண்டு புதிய நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து வருவதாலும், முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் உதயநிதி ஆதிக்கம் செலுத்துவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன. உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் சிலர் பொதுவெளியில் பேசிவந்தனர். இந்நிலையில் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என முதல்வருக்கு யோசனை சொல்லப்பட்டதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் துறைக்கு யாரைச்  செயலாளராக நியமிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதற்காக பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். ஒருவழியாகச் சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருக்கும் ககன்தீப் சிங் பேடியை நியமிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. கடந்த சிலதினங்களுக்கு முன்பாக காசிமேடு பகுதிக்கு ஆய்வுக்குச் சென்ற முதல்வரின் கான்வாய் வாகனத்தில் முதல்வர் மேயருடன், இவர் கான்வாயில் தொங்கியபடி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in