முதல்வரின் காலை உணவுத் திட்டம்: புதிய அதிகாரியை நியமித்தது தமிழக அரசு!

முதல்வரின் காலை உணவுத் திட்டம்: புதிய அதிகாரியை நியமித்தது தமிழக அரசு!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச் சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப் பள்ளி மாணவ- மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படும் 1545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 2022-2023 -ம் கல்வி ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட ஆணை வெளியிடப்பட்டது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை திறம்படச் செயல்படுத்திட ஏதுவாக இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலர், க. இளம்பகவத் ஐ.ஏ.எஸ் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in