’ஆம் ஆத்மியால் உயிருக்கு ஆபத்து; சிறைவாசத்தை டெல்லிக்கு வெளியே மாற்றுங்கள்’

மோசடி மன்னன் சுகேஷின் புது வீச்சு
சுகேஷ், கேஜ்ரிவால்
சுகேஷ், கேஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியினரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் டெல்லிக்கு வெளியே சிறைவாசத்தை மாற்றுமாறு, திஹாரில் அடைக்கப்பட்டிருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் புது கோரிக்கையை விடுத்திறார்.

கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு எதிராக திஹார் சிறையிலிருந்தபடி சுகேஷ் சந்திரசேகர் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார். ஆஆக தலைவர் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக தொடர் புகார்களை டெல்லி துணைநிலை ஆளுநருக்கு சுகேஷ் அனுப்பிவருகிறார். ’தனக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக கேஜ்ரிவால் பேரம் பேசியதாகவும், பல்வேறு தேர்தல் பணிகளுக்காக பலகோடி ரூபாய்களை லஞ்சமாக பெற்றதாகவும், டெல்லி சிறையில் வசதிகள் செய்து தருவதற்காக ஆஆக அமைச்சர்கள் தனியாக கோடிகளை பெற்றதாகவும்’ கடிதங்கள் தோறும் புது அதிரடிகளை சுகேஷ் வெளியிட்டு வந்தார்.

ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு சுகேஷ் அனுப்பும் கடிதங்கள் அனைத்தும் சுடச்சுட ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகின்றன. கேஜ்ரிவால் மற்றும் ஆஆக அமைச்சகர்களுடனான தனது சந்திப்பு, பணபேர விவகாரம் உள்ளிட்டவற்றை நாள், இடம், உடனிருந்தோர் என புள்ளிவிபரங்களோடு அந்த கடிதங்களில் சுகேஷ் விவரித்துள்ளார். சுகேஷ் முன்வைத்த குற்றச்சாட்டுகளை கேஜ்ரிவால் அடியோடு மறுத்தபோதும், குஜராத் தேர்தல் பிரச்சராத்தில் இவை சங்கடங்களை உருவாக்கி வருகின்றன.

குஜராத் தேர்தலில் ஆஆக பெயரை கெடுக்கவும், மோர்பி பால துயரத்திலிருந்து திசை திருப்பவும் பாஜக வீசும் புதிய அஸ்திரமே சுகேஷ் என்று ஆம் ஆத்மி கட்சியினர் பதிலடி தந்து வருகின்றனர்.

இந்த சூழலில் டெல்லி துணைநிலை ஆளுநருக்கு சுகேஷ் புதிய கடிதம் எழுதியுள்ளான். இது குறித்து சுகேஷின் வழக்கறிஞர் அசோக் குமார் சிங் இன்று(நவ.10) கூடுதல் விபரங்களை தந்துள்ளார். அந்த கடிதத்தில், ’திஹார் சிறையில் ஆம் ஆத்மி கட்சியினரால் தனது உயிருக்கு ஆபத்து விளைந்திருப்பதாகவும், எனவே தன்னையும் தனது மனைவியையும் உடனடி யாக டெல்லிக்கு வெளியே வேறு சிறைக்கு மாற்றுமாறும்’ கோரிக்கை விடுத்துள்ளான். முந்தைய கடிதங்களைப் போலவே இதுவும் டெல்லி அரசியலிலும் குஜராத் தேர்தல் களத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in