தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு: தலைமை அறிவிப்பு

பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலைதமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு: தலைமை அறிவிப்பு

கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடாகா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிர முனைப்பு காட்டிவருகிறது.

கடந்த 2013 - 2018-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அதன் பின் நடைபெற்ற தேர்தல்களில் தனித்து வெற்றி பெற முடியவில்லை. இதன் காரணமாக இந்தத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, `மக்கள் குரல்’ என்ற பெயரில் யாத்திரையைத் தொடங்கி நடத்திவருகிறது. இந்த யாத்திரையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் பங்கேற்று வருகின்றனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா திடீரென அறிவித்து அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். ஆனாலும், மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று கூறியுள்ளார்.

பாஜகவின் தேசிய செயலாளர் அருண்சிங் அறிவிப்பு
பாஜகவின் தேசிய செயலாளர் அருண்சிங் அறிவிப்புதமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு: தலைமை அறிவிப்பு

இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை பாஜக தலைமை இன்று அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை பாஜகவின் தேசிய செயலாளர் அருண்சிங் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in