மகாராஷ்டிராவில் பதவியேற்றது புதிய அமைச்சரவை: யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

மகாராஷ்டிராவில் பதவியேற்றது புதிய அமைச்சரவை: யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் புதிதாக 18 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றபின்னர் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சரவையில் சிவசேனா ( அதிருப்தி) சார்பில் 9 அமைச்சர்களும், பாஜக சார்பில் 9 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

சிவசேனாவில் அதிருப்தி வெடித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பதவியை ராஜினாமா செய்தது. அதன்பின்னர் ஜூன் 30ம் தேதி ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராக பொறுப்பேற்றார். ஆட்சி அமைத்து ஒரு மாதத்துக்கும் மேலான நிலையில் பல்வேறு கட்ட சிக்கல்களுக்கு பின்னர் தற்போது புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சிவசேனா சார்பில் தாதா பூஸ், சம்பூஜே தேசாய், சந்தீபன் பும்ரே, உதய் சமந்த், தனஜி சவந்த், அப்துல் சட்டார், தீபக் கேசர்கர், குலாப்ராவ் பாட்டீல், சஞ்சய் தத்தோட் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.

பாஜகவின் சார்பில் சந்திரகாந்த் பாட்டீல், சுதிர், கிரிஷ் மகாஜன், சுரேஷ் காடே, ராதாகிருஷ்ண விகே பாட்டீல், ரவீந்திர சவான், மங்கல் ப்ரபாத் லோதா, விஜய்குமார் காவிட் அதுல் சாவே உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

பாஜக வசம் 106 எம் எல் ஏக்களும், அதிருப்தி சிவசேனா வசம் 39 எம் எல் ஏக்களும் உள்ளனர். ஆனாலும் இருவருக்கும் சமமாகவே அமைச்சர் வாய்ப்பு பகிர்ந்துக் கொள்ளப்பட்டுள்ளது. தங்களுக்கு குறைவான வாய்ப்பு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜக உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in