கார்த்தி சிதம்பரத்தின் ரியாக் ஷன் - கொந்தளித்த நெட்டிசன்கள்

கார்த்தி சிதம்பரத்தின் ரியாக் ஷன் - கொந்தளித்த நெட்டிசன்கள்

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் முடிவுகளை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து, செய்திச் சேனல்களையும், இணைய தளங்களையும் பார்த்து உச்சுக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மக்களவை உறுப்பினரும், மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரமோ, "இப்ப நெட்ப்ளிக்ஸ்ல என்ன பார்க்கலாம்னு சொல்லுங்க, மக்களே...! (Any recommendations for what to watch on @netflix now!) என்று ஒரு ட்வீட் போட்டிருக்கிறார்.

அதைப் பார்த்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரும், திமுகவினரும் கடும் கோபமடைந்திருக்கிறார்கள். அந்த ட்வீட்டுக்கு வந்த எதிர்வினைகளின் தொகுப்பு இங்கே.

இரத்தினவேலு வசந்தா: உங்களுக்கு முதலும் கடைசியுமா இதுதான் எம்பி பதவி.

சிவகாமி: கொஞ்சமாவது வருத்தமிருக்குதான்னு பாருங்க இந்தத சிவகங்கை சின்னப் பையனுக்கு.

குசும்பன்: பேர் கெடுக்கும் பிள்ளை. பேமிலியோட பார்க்கலாம். நெட்பிளிக்ஸ்ல படம் வரலைன்னா எழுந்து கண்ணாடியைப் பார்க்கவும்.

அன்பு முகமது: ச்சே... நமக்கு இருக்கிற வருத்தம் கூட இவருக்கு இல்லையே. ராகுல்காந்தியை நினைத்தால் உண்மையிலேயே வருத்தமா இருக்குது.

ஆர்.எம்.தமிழச்சி: நீங்க ஏன் பாஜகவில் சேரக் கூடாது?

ஜகுர்: ராகுல், பிரியங்கா உழைப்பை வீணடித்த காங்கிரஸ்காரர்கள். உண்மையிலேயே வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தா பதவியை ராஜினாமா செஞ்சுட்டுப் போங்கய்யா...

சங்கரன்: அங்கே 5 ஸ்டேட்ஸ் நொட்டிக்கிச்சு. உனக்கென்ன நெட்பிளிக்ஸ் வேண்டிக் கிடக்குது?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in