இஸ்ரேல் பிரதமரை சுட்டுக்கொல்ல வேண்டும்: சர்ச்சையில் காங்கிரஸ் எம்பி

காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னிதன்
காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னிதன்

"விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் இஸ்ரேல் பிரதமரை சுட்டுக்கொள்வதற்கான நேரமிது" என்று கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் செயல்பட்டு வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், போரில் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இதனிடையே, கேரளாவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக காசர்கோடு பகுதியை சேர்ந்த ஐக்கிய முஸ்லிம் ஜமாத் அமைப்பு சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில், காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னிதன் கலந்து கொண்டு பேசுகையில், "ஜெனீவா உடன்படிக்கையின் கீழுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் மீறுபவர்களை என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் கேட்கலாம். 2-ம் உலகப் போருக்கு பின்னர் போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கான விசாரணை நடந்தது.

இஸ்ரேல் போர்
இஸ்ரேல் போர்

அப்போது, போர் குற்றவாளிகளை விசாரணையின்றி சுட்டுக்கொல்லும் நடைமுறை இருந்தது. இது இஸ்ரேல் பிரதமருக்கும் பொருந்தும். உலகத்தின் முன் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக நிற்கிறார். பாலஸ்தீனர்கள் மீது அவருடைய படைகளை அனுப்பி அராஜகங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். அதனால், விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் நெதன்யாகுவை சுட்டுக்கொள்வதற்கான நேரமிது" என்று கூறினார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in