`அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியீடு’- சொல்கிறார் அண்ணாமலை!

`அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியீடு’-  சொல்கிறார் அண்ணாமலை!

``திமுக அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்'' எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, '' பொதுமக்கள் பேசும் அளவிற்குத் தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது. ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்கள் ஆளுநரைச் சந்தித்துப் பேசியது எனக்குத் தெரியாது. ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த வேண்டும்; தடை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மழை, வெள்ளத்தில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை.

தமிழகத்தில் பொதுமக்கள் பேசும் அளவிற்கு ஊழல் மலிந்து விட்டது. திமுக அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” என்றார். ஏற்கெனவே மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in