அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறது அதிமுக!

நீட் விவகாரத்தில் பாஜகவை பின்பற்றினர் ஓபிஎஸ், ஈபிஎஸ்
ஓபிஎஸ், ஈபிஎஸ்
ஓபிஎஸ், ஈபிஎஸ்Hindu கோப்பு படம்

நீட் மசோதா தொடர்பாக நடைபெறும் சட்டப்பேரவை அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதற்கான காரணம் பின் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பாஜகவை தொடர்ந்து அதிமுகவும் அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்திருப்பது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டிய நிலையில், நான்று மாதத்துக்கு பிறகு திடீரென அந்த மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவிட்டார் ஆளுநர். இது, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், நீட் தேர்வு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக, சட்டப்பேரவை அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம் ஆகிய 11 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்தநிலையில் நீட் விலக்கு தொடர்பாக இன்று நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என தலைமை தெரிவித்துள்ளது. நீட் விலக்கிற்காக ஏற்கெனவே நடந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்ற நிலையில், தற்போதைய கூட்டத்தில் பங்கேற்க வில்லை கூறியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்து. பாஜகவை பின்பற்றி அதிமுகவும் அறிவித்திருப்பது மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in