நீட் விலக்கு கோரி கடிதம்: சு.வெங்கடேசன் எம்பிக்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய முக்கிய பதில்

சு.வெங்கடேசன் எம்பி
சு.வெங்கடேசன் எம்பி நீட் விலக்கு கோரி கடிதம்: சு.வெங்கடேசன் எம்பிக்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய முக்கிய பதில்

நீட் விலக்கு கோரி மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்துக்கு குடியரசுத் தலைவர் பதில் அளித்துள்ளார்.

அனித்தாக்களின் கல்வி உரிமை; குடியரசு தலைவரின் பதிலும். முதல்வரின் பெயர் சூட்டலும் என்ற தலைப்புடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மதுரை எம்பி சு.வெங்கடேசன், "தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக் கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். “உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக” குடியரசு தலைவர் இன்று பதிலளித்துள்ளார்.

அரியலூர் மருத்துவக் கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி இன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தின் கனவு அனித்தாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in