'நீட் விலக்கு நம் இலக்கு'... முதல் நபராக கையெழுத்திட்ட முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

’நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற திமுகவின் கையெழுத்து இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ’’பாராட்டுகளைப் போல விமர்சனங்களையும் நான் விரும்புகிறேன். விமர்சனங்களில் தனிப்பட்ட நலனை விட பொதுநலன்தான் அதிகம் இருக்கும்.

தமிழர்களை தலை நிமிர வைக்க பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம். யாருடைய தலையையும் எடுக்க பிறந்தது அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே ஏன் மனித குலத்திற்கே எதிரான இயக்கம்

கொம்பாதி கொம்பர்கள் என்று சொல்லப்பட்டவர்களையும் எல்லாம் எதிர்த்து நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். திமுகவை கற்பனையில் கூட யாராலும் அழிக்க முடியாது ஒருசிலர் புரிந்துக் கொள்ள வேண்டும்.

எதிர்கட்சி என்று ஒன்று இங்கு உள்ளது. கொள்கை கிலோ என்ன விலை என்று கேட்கும் கூட்டம் தான் அதிமுக. பாஜகவின் பாதம் தாங்கியாக இருந்து தமிழகத்தின் உரிமைகளை அதிமுக அடகு வைத்தது. என்னுடைய மனைவி துர்கா கோயிலுக்குச் செல்வது அவருடைய விருப்பம். அதை நான் தடுக்க மாட்டேன். தடுக்கவும் விரும்பவில்லை.

நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்கான் எதிரியே தவிர, ஆன்மிகத்திற்கு அல்ல. இப்போது கலைஞரின் பாரசக்தி வசனம்தான் உங்களுக்கு பதில், ‘கோயில் கூடாது என்பதல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது’ ’’ என்றார்.

முன்னதாக திமுகவின் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in