
நிட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞர் அணியின் சார்பில் நடத்தப்படும் உண்ணாவிரத போராட்டத்தில் கண்ணியத்தை காக்க வேண்டும் என கட்சியினருக்கு அமைச்சர் உதயநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுகவின் மருத்துவர், மாணவர் மற்றும் இளைஞரணி இணைந்து நீட் தேர்வுக்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். இது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
’உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மாலை 5 மணி வரை கட்டாயம் இருக்க வேண்டும். போராட்டத்தின் போது யாரும் எதையும் சாப்பிடக் கூடாது. எல்லோரிடமும் மொபைல் போன் என்ற ஆயுதம் உள்ளது. அனைவரும் இதை மனதில் கொள்ள வேண்டும்.
போராட்டத்தின் இடையே யாரும் எழுந்து சென்று, சாப்பிட்டு விட்டு திரும்பினால் அது உடனே சமூக வலைதளங்களில் எதிரொலிக்கும். எனவே உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பவர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்’ என உதயநிதி கூறியுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.