முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தகவல்!

ஜம்மு - காஷ்மீரில் 4ம் கட்டத்தில் வாக்குப்பதிவு (கோப்புப் படம்)
ஜம்மு - காஷ்மீரில் 4ம் கட்டத்தில் வாக்குப்பதிவு (கோப்புப் படம்)

மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 13ம் தேதி வரை 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இனி வரும் 20, 26 மற்றும் ஜூன் 1 ஆகிய நாள்களில் எஞ்சியுள்ள 3 கட்டத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் தற்போது வரை முடிவடைந்துள்ள 4 கட்டத் தேர்தல்களிலும் சேர்த்து 66.95 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைய தகவல்படி, கடந்த 13ம் தேதி நடைபெற்ற 4ம் கட்ட தேர்தலில் 69.16 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இது கடந்த, 2019 மக்களவைத் தேர்தலின் இதே 4ம் கட்ட வாக்குப்பதிவு சதவீதத்தை விட 3.65 சதவீதம் அதிகமாகும். நடப்பு மக்களவைத் தேர்தலின் 3ம் கட்டத்தில் 65.68 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 2019 பொதுத் தேர்தலின் 3ம் கட்ட தேர்தலில் 68.4 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

கடந்த ஏப்ரல் 26ம் தேதி நடைபெற்ற 2ம் கட்டத் தேர்தலில் 66.71 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 2019ம் ஆண்டு தேர்தலில் இரண்டாம் கட்டத்தில் 69.64 சதவீதம் வாக்குப் பதிவாகி இருந்தது.

இதேபோல், கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்த முதல் கட்டத் தேர்தலில் 66.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலில், முதல் கட்டத்தில் 69.43 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. தற்போது வரை ஒட்டுமொத்தமாக 4 கட்டத் தேர்தல்களிலும் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024
மக்களவைத் தேர்தல் 2024

இதுவரையிலான தேர்தல்களில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 97 கோடி வாக்காளர்களில் இதுவரை 45.10 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவிருக்கும் அடுத்தடுத்த கட்டத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வந்து தங்களது வாக்குகளை தவாறு செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in