ராகுல் காந்தியின் நடைபயணத்துக்குப் பெருகும் ஆதரவு: பங்கேற்கப் போகும் முக்கிய எதிர்க்கட்சிகள்!

ராகுல் காந்தியின் நடைபயணத்துக்குப் பெருகும் ஆதரவு: பங்கேற்கப் போகும் முக்கிய எதிர்க்கட்சிகள்!

காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையில் என்சிபி, சிவசேனா உள்ளிட்ட பல முக்கிய எதிர்க்கட்சிகள் இணையவுள்ளன.

ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் பாரத் ஜோடா எனப்படும் இந்திய ஒற்றுமை பயணத்துக்கு தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த அறிவிப்பால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா வழியாக இந்த யாத்திரை செல்லும் போது இக்கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் நானா படோல் முன்னிலையில் கட்சியின் முன்னாள் எம்பி ஹுசைன் தல்வாயால் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர் இந்த கட்சிகளையும், சமூக அமைப்புகளையும் ராகுல் காந்தியின் யாத்திரையில் இணைய வலியுறுத்தினார்.

பாரத் ஜோடோ யாத்திரை நவம்பர் முதல் வாரத்தில் மகாராஷ்டிராவிற்குள் நுழைகிறது. அப்போது என்சிபி தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோர் அதை வரவேற்க உள்ளனர்.

இது தொடர்பாக பேசிய நானா படோல் , ‘‘மத்திய பாஜக அரசு குடிமக்களின் எதிர்காலத்தை இருளடையச் செய்துள்ளது. பிஜேபி மற்ற கட்சிகளை பாராளுமன்றம் அல்லாத வழிகளில் ஒழிக்க விரும்புகிறது, ஏனெனில் அது மட்டுமே நாட்டின் அரசியலில் தொடர்புடையதாக இருக்க விரும்புகிறது. பாஜக 'மனுராஜ்யத்தை' மீண்டும் கொண்டுவர விரும்புகிறது, எனவே ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பங்கேற்க வேண்டிய நேரம் இது. இந்த கட்சிகள் பங்கேற்பது குறித்து திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் ” என அவர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in