பாகிஸ்தான் பிரதமராக அதிகார பகிர்வு; நவாஸ் ஷெரீப் - பிலாவல் பூட்டோ இடையே விசித்திர உடன்பாடு

நவாஸ் ஷெரீப் - பிலாவல் பூட்டோ
நவாஸ் ஷெரீப் - பிலாவல் பூட்டோ

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் முடிவுகளில் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டாததில், அதிகார பகிர்விலும், ஆட்சியமைத்து பிரதமர் நாற்காலியை ஆக்கிரமிப்பதிலும் கூட்டல் கழித்தல் கணக்குகள் அதிகரித்துள்ளன.

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சி எதுவும் தேர்வாகவில்லை. எனவே பாகிஸ்தான் அரசியல் வட்டாரம் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. ஒருவழியாக ஆண்டுகள் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுக்கு பிரதான கட்சிகள் இறங்கி வந்துள்ளன.

பாகிஸ்தான் கொடி
பாகிஸ்தான் கொடி

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகியவை ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் இறுதி முடிவை நெருங்கியுள்ளன. அதற்கான அதிகாரப் பகிர்வின்படி, பாகிஸ்தான் பிரதமரின் ஐந்தாண்டு பதவிக்காலத்தை இரு தரப்புக்கும் இடையே 3:2 என்ற விகிதத்தில் பிரித்துக்கொள்ள முடிவாகி உள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில், இதுவரையிலான தரவுகளின்படி இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியால் ஆதரிக்கப்பட்ட சுயேட்சைகள் 101 இடங்களையும், நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் 75 இடங்களையும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் பிபிபி கட்சி 54 இடங்களையும் பெற்றுள்ளன. இதற்கு அப்பால் முட்டாஹிதா குவாமி இயக்கம் கட்சி 17 இடங்களை வென்றுள்ளது.

இந்தப் பின்னணியில், நவாஸ் கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் கட்சியின் பிரதிநிதிகள் இடையிலான நேற்றைய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. ஆனால் நீண்ட காலமாக கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தேசத்திற்கு இத்தகைய அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் பலிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நவாஸ் ஷெரீப் - பிலாவல் பூட்டோ சர்தாரி - இம்ரான் கான்
நவாஸ் ஷெரீப் - பிலாவல் பூட்டோ சர்தாரி - இம்ரான் கான்

பிடிஐ கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் சிறையில் முடக்கப்பட்டதோடு அவரது கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. எனவே கட்சி வேட்பாளர்கள் அனைவரும் சுயேட்சைகளாக நின்று பெருவாரி இடங்களில் வெற்றி பெற்றனர். ஆனால், இம்ரான் கானின் சுயேட்சைகளை, தேர்தலுக்கு பிந்தைய நவாஸ் - பிலாவல் கூட்டணி முறியடித்திருக்கிறது.

நடந்து முடிந்த பொதுத்தேர்தல், பாகிஸ்தான் வரலாற்றில் மிகக் குறைவான நம்பகத்தன்மை வாய்ந்த ஒன்று என்று விமர்சிக்கப்படுகிறது. மேலும் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதன் பின்னணியில், ராணுவத்தின் தலையீட்டில் பேரில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நிகழ்ந்ததாகவும், நவாஸ் ஷெரீப் தரப்புக்கு சாதகமாக அவை மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் நீள்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...


இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in