காஷ்மீர் சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பின் நவராத்திரி பூஜை: அமித் ஷா பெருமிதம்!

காஷ்மீர் சாரதா கோயில்
காஷ்மீர் சாரதா கோயில்

காஷ்மீரில் உள்ள சாரதாதேவி கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நவராத்திரி பூஜை நடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சாரதாதேவி கோயிலில் நவராத்திரி பூஜைகள் எதுவும் நடத்தப்படவில்லை. பின்னர் தாக்குதல்களால் இந்த கோயில் சிதிலமடைந்தது. 

அதே இடத்தில் புதிய கோயில் கட்டப்பட்டு கடந்த மார்ச் 23-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் திறக்கப்பட்டது. இந்தக் கோயிலில் இந்த ஆண்டு நவராத்திரி பூஜை மிகவும் சிறப்பாக நடந்தது. 

அமித் ஷா
அமித் ஷா

இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் பெருமிதத்துடன் பதிவிட்டு உள்ளார். '1947ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீர் சாரதா கோயிலில் நவராத்திரி பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது.  இது ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதை மட்டுமின்றி,  பிரதமரின் தலைமையில் தேசத்தின் ஆன்மிக மற்றும் கலாச்சாரம் மீண்டும் எழுவதை குறிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!

சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்

பூங்காவில் அத்துமீறிய காதலர்கள்... அலற விட்ட போலீஸார்!

தொடரும் போர்... 10 லட்சம் மக்கள் வெளியேறிய பரிதாபம்

டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in