ஜம்மு காஷ்மீருக்காக ஒன்றிணைந்தன எதிர்க்கட்சிகள்!

எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சிகள்ஜம்மு காஷ்மீருக்காக ஒன்றிணைந்தன எதிர்க்கட்சிகள்!

ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பல்வேறு தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மே மாதம் ஸ்ரீநகருக்குச் சென்று மக்களுக்கு தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தவும் எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியது. அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்குச் சென்று ஜம்மு காஷ்மீரில் உடனடியாக சட்டமன்றத் தேர்தலை நடத்தக் கோரி ஒரு மனுவை சமர்ப்பித்தனர்.

ஜம்மு காஷ்மீர் மக்களின் வலியைப் பகிர்ந்து கொள்வதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் மே மாதம் ஸ்ரீநகருக்கு வருகை தருவார்கள் என்றும், அவர்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளிப்பதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து மீட்டெடுப்பு கோரிக்கைக்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சிபிஎம், ஆர்ஜேடி, சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் பல எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

தேர்தல் ஆணையத்துடனான சந்திப்புக்குப் பிறகு, தேர்தல் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தேர்தல் ஆணையம் உறுதியளித்ததாக பரூக் அப்துல்லா கூறினார். அனைத்து கட்சிகளும் தேர்தலை விரும்புவதாகவும், தேர்தலை தாமதப்படுத்த எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டு கடைசியாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஆகஸ்ட் 2019 ல், 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in