அண்ணாமலைக்கு எதிராக அறிக்கை வாசித்த ஓபிஎஸ்!

அண்ணாமலை
அண்ணாமலைஅறிக்கை வாசித்த ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில் அண்ணாமலை மீது பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக அண்ணாமலை செயல்படுவதாக அமித் ஷா வட்டாரத்துக்கு ஓபிஎஸ் தகவல் அனுப்பியதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

இதன் விளைவாகவே அண்ணாமலை அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டராம். ஈபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு குறித்து டெல்லியில் அண்ணாமலையாரிடம் அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கினார்களாம். இதற்கெல்லாம் தன் தரப்பு நியாயத்தை சொல்லிவிட்டு வந்த அண்ணாமலையார், தமிழகம் திரும்பிய வேகத்தில் இரண்டு தரப்பையும் சந்தித்துப் பேசிவிட்டு, “அதிமுகவை ஒருங்கிணைக்கவே பாடுபடுகிறோம்” என பேட்டிகளை போட்டுத்தாக்கினாராம்.

ஆனாலும் ஈபிஎஸ் தரப்பில் முறுக்கிக் கொண்டு நிற்பதால் அடுத்து எங்கே போவது என வழி தெரியாமல் முழிபிதுங்கி நிற்கிறாராம் அண்ணாமலையார்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in