`பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை சமூகம் வழங்க வேண்டும்'- ஆளுநர் தமிழிசை

`பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை சமூகம் வழங்க வேண்டும்'- ஆளுநர் தமிழிசை

``பாலின தொந்தரவுகளில் இருந்து பாதுக்காக்க இந்த சமூகம் உறுதி ஏற்க வேண்டும்'' என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘’பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை  இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம். பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம்.

புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம். அனைவருக்கும் தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் ‘’ என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in