`பழைய கேப்டனா திரும்பி வரணும்'- விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதாவிடம் நலம் விசாரித்தார் மோடி!

`பழைய கேப்டனா திரும்பி வரணும்'-  விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதாவிடம் நலம் விசாரித்தார் மோடி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பிரேமலதாவிடம் நலம் விசாரித்தார். விஜயகாந்த் உடல் நலம் பெற்று மீண்டும் பணிகளைத் தொடங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு வெளிநாடுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 14-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்த்துக்கு நீரிழிவு பிரச்சினை காரணமாக வலது காலில் உள்ள விரல்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதால் வலது காலில் உள்ள மூன்று விரல்கள் அகற்றப்பட்டன. மேலும் அவருக்குத் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல் நிலை குறித்து தவறான தகவல்களும் வெளியாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து அவர் நலமாக உள்ளதாக பிரேமலதா தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அவர் உடல்நிலை குறித்து நலம் விசாரித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை பிரேமலதாவிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும் சிகிச்சை முடிந்து நல்ல உடல் நலத்தோடு, மீண்டும் பணியாற்ற இறைவனைப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in