இதைச் சொல்வதற்கு ஜெயக்குமார் யார்... கொந்தளித்த நாராயணன் திருப்பதி

ஜெயக்குமார்- நாராயணன் திருப்பதி
ஜெயக்குமார்- நாராயணன் திருப்பதி

அண்ணாமலை தலைவராக இருக்க தகுதி இல்லை என சொல்வதற்கு ஜெயக்குமார் யார்?" என்று நாராயணன் திருப்பதி காட்டமாக கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பலமுறை எச்சரித்தும் அண்ணாமலை அலட்சியப்படுத்துகிறார். பாஜகவுடன் தற்போது அதிமுக கூட்டணியில் இல்லை. இது தான் அதிமுக கட்சி நிலைப்பாடு. கூட்டணி முறிவால் அதிமுகவுக்கு இழப்பு எதுவும் இல்லை. தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை பற்றி விமர்சனம் செய்தால் கடுமையான அளவுக்கு விமர்சனங்களை சந்திக்க நேரிடும்" என்று எச்சரித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, ''இப்போது கூட்டணி இல்லை. தேர்தல் காலத்தில் தான் கூட்டணி. கொள்கையில் ஒத்துப்போக வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அண்ணாமலை குறித்து ஜெயக்குமார் பேசியது முற்றிலும் தவறானது. அண்ணாமலை தலைவராக இருக்க தகுதி இல்லை என சொல்வதற்கு ஜெயக்குமார் யார்?" என்று காட்டமாக கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in