பகீர்... சந்திரபாபு நாயுடுவை சிறையிலேயே கொலை செய்ய சதி; மகன் பரபரப்பு குற்றச்சாட்டு!

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சிறையிலேயே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜமுந்திரி சிறை
ராஜமுந்திரி சிறை

550 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இவர் அடைக்கப்பட்டுள்ள அதே சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த கஞ்சட்டி சத்திய நாராயணா என்பவர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சிறை வளாகத்தில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாக சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட சிறைவாசிகள் சிறை நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர். இருந்த போதும் இதுவரை கொசு ஒழிப்பு தொடர்பான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நாரா லோகேஷ்
நாரா லோகேஷ்

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் தனது தந்தையும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை சிறையிலேயே கொலை செய்யும் சதித்திட்டம் உருவாகியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சிறை அதிகாரிகளிடம் கொசுத்தொல்லை குறித்து சுட்டிக்காட்டிய போதும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது தந்தையின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியுமே பொறுப்பு எனவும் நாரா லோகேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in