`நம்மில்ஒருவர்எம்கேஎஸ்'- ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

`நம்மில்ஒருவர்எம்கேஎஸ்'- ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூல் இன்று வெளியாக உள்ள நிலையில் `நம்மில் ஒருவர்எம்கேஎஸ்' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள, `உங்களில் ஒருவன்' பாகம்1 என்ற நூல் சென்னையில் இன்று வெளியிடப்படுகிறது. முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று ஸ்டாலின் சுயசரிதை நூலை வெளியிட உள்ளார். இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலை குறித்து எதிர்க்கட்சிகளை ஸ்டாலின் ஒருங்கிணைத்து வருகிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய அளவில் #NammilOruvarMKS என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இன்று டிரெண்டாகியுள்ளது. மு.க.ஸ்டாலினின் சுயசரிதை இன்று வெளியாக உள்ள நிலையில், அவரது பிறந்தநாள் நாளை திமுகவினரால் கொண்டாப்பட உள்ளது. தனது பிறந்தநாளை ஆரம்பரமாக கொண்டாடக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in