
திமுக சார்பில் பல்வேறு அணிகளுக்கும் மாநில நிர்வாகிகள் அண்மையில் நியமிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இப்போது திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்போர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையான மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முனைவர் க.பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ஆஸ்டின், முனைவர் கோவி செழியன், தமிழன் பிரசன்னா, இள.புகழேந்தி, சிவ.ஜெயராஜ், பி.டி.அரசகுமார், வழக்கறிஞர் இ.பரந்தாமன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர் சல்மா, வழக்கறிஞர் சித்திக், டாக்டர் சையது ஹபீஸ், முனைவர் சபாபதி மோகன், டாக்டர் கனிமொழி சோமு, கவிஞர் தமிழ்தாசன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்தப் பட்டியலில், சி.வி.எம்.பி எழிலரசன், வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி, தமிழ் கா.அமுதரசன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், கம்பம் செல்வேந்திரன், டாக்டர் கலாநிதி வீராசாமி, வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான், வழக்கறிஞர் வைத்தியலிங்கம், வி.சி.சந்திரசேகர், வி.பி.கலைராஜன், வழக்கறிஞர் சரவணன், வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம், கார்த்திகேய சிவசேனாபதி, எம்.எம்.அப்துல்லா, காசி முத்துமாணிக்கம், வழக்கறிஞர் ப.மதிவாணன், சேலம் தரணிதரன், குடியாத்தம் குமரன், விஜிலா சத்தியானந்த். மதுரை பாலா, விக்கி, செல்வி பத்மப்பிரியா, டாக்டர் யாழினி, வழக்கறிஞர் புகழ் காந்தி ஆகியோரும் விவாதங்களில் பங்கேற்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.