ஊ சொல்றியா?, ஆலுமா டோலுமா என்பதெல்லாம் பாடலா?

சட்டப்பேரவையில் கொந்தளித்த நயினார் நாகேந்திரன்
ஊ சொல்றியா?, ஆலுமா டோலுமா என்பதெல்லாம் பாடலா?

``ஊ சொல்றியா?, ஆலுமா டோலுமா என்பதெல்லாம் பாடலா?" என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கையில் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மாணவர்களிடம் என்ன திறன் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் வகையில் அவர்களை வழி நடத்திட வேண்டும் என்று கூறியதோடு, என் மனைவி ஒரு சேலை, ஜாக்கெட் தைப்பதற்கு 1,700 ரூபாயை கட்டணமாக வாங்கிவிட்டார்கள் என்றும், தையல் கலையையெல்லாம் ஏன் ஒரு படிப்பாக கொண்டுவந்து, வேலைவாய்ப்பை ஏன் உருவாக்கித் தரக்கூடாது? என்று வினா எழுப்பினார்.

பின்னர் பெண்களின் உடை குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், ஊ சொல்றியா? ஊஊ சொல்றியா?, ஆலுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா என்பதெல்லாம் பாடலா?. இத்தகைய பாடல்களுக்கு எல்லாம் இந்தி படித்துவிட்டா அர்த்தம் தேட முடியும். இதுபோன்ற பாடல் வரிகளால் 50 வருடங்களுக்கு பின்னால் வருவோர், இதுதான் நம் கலாச்சாரம் என எண்ணிவிட மாட்டார்களா?. நமது தொன்மையான பண்பாட்டை பேணிக்காக்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in