நாகர்கோவில் முதல் மேயர்... பணமழையில் நனையும் வாக்காளர்கள்

நாகர்கோவில் முதல் மேயர்... பணமழையில் நனையும் வாக்காளர்கள்
நாகர்கோவில் மாநகராட்சி

நாகர்கோவிலின் முதல் மேயர் யார் என்பதில் திமுக, அதிமுக, பாஜக இடையே கடும்போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதலே மாநகர வார்டுகளுக்குள் பணம் தண்ணீராக பாயத் தொடங்கிவிட்டது.

மேயர் வேட்பாளர்களின் வார்டுகள் எப்படி இருக்கின்றன என வாக்களர்கள் சிலரிடம் பேசினோம். அவர்களும் பெயர் வேண்டாமே என்னும் நிபந்தனையோடு பேசினார்கள்.

திமுகவின் மேயர் வேட்பாளர் மகேஷ். நாகர்கோவில் மாநகராட்சியின் 4-வது வார்டில் நிற்கிறார். இங்கு திமுக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயும், அதிமுக வீட்டுக்கு ஆயிரம் ரூபாயும் கொடுத்துள்ளன. பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டிக்களத்தில் இருந்தாலும் பிரதானமான போட்டி இங்கு திமுக, அதிமுகவுக்கு இடையில்தான்!

நாகர்கோவிலில் இருமுறை நகர்மன்றத் தலைவராக இருந்தவர் மீனாதேவ். இம்முறை தனக்கு மிகுந்த செல்வாக்குள்ள வார்டைத்தான் மீனாதேவ் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனாலும் திமுக வேட்பாளர் டப் கொடுக்க, பாஜக இந்த வார்டில் வீட்டுக்கு 1,000 ரூபாய் கொடுத்திருக்கிறது.

அதிமுகவின் மேயர் வேட்பாளர் சாய்ஸ் ஸ்ரீலிஜா. இவர் போட்டியிடும் வார்டில் ஓட்டுக்கு 1,000 ரூபாய் என்ற கணக்கில் பணம் விநியோகித்துள்ளது அதிமுக தரப்பு.

“எப்படியாவது ஜெயித்துவந்து ஜனநாயகத்தை காப்பாத்திடுங்கப்பு” என, நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் நாகர்கோவில்வாசிகள்!

Related Stories

No stories found.