தோள் சீலைப்போராட்டம் மாநாடு; ஸ்டாலின் பங்கேற்பா, புறக்கணிப்பா?: வலுக்கும் எதிர்ப்பால் குழப்பம்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்தோள் சீலைப்போராட்டம் மாநாடு; ஸ்டாலின் பங்கேற்பா, புறக்கணிப்பா?: வலுக்கும் எதிர்ப்பால் குழப்பம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தோள் சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டுவிழா நாளை மாலை நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மார்க்சிஸ்ட், திமுகவினர் தீவிரமாக செய்து வருகின்றனர். அதேநேரம் இதற்கு எதிர்ப்பும் வலுத்து வருவதால் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வாரா அல்லது கடைசி நேரத்தில் மாற்றம் இருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

நாடார் அமைப்புகள் ஆட்சியரிடம் மனு
நாடார் அமைப்புகள் ஆட்சியரிடம் மனுதோள் சீலைப்போராட்டம் மாநாடு; ஸ்டாலின் பங்கேற்பா, புறக்கணிப்பா?: வலுக்கும் எதிர்ப்பால் குழப்பம்

கன்னியாகுமரி மாவட்டம், தொடக்கக் காலங்களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. அப்போது அங்கு கடுமையான சாதிப் பாகுபாடும் நிலவியது. குறிப்பிட்ட சில சமூகம் தோள் சீலை அணிய அனுமதி இல்லை என்ற நிலை இருந்தது. அதற்கு எதிராகப் போராடி தீர்வு பெற்றனர். அதன் நினைவாக 200-வது ஆண்டுவிழாவை திமுக கூட்டணி கட்சிகள் முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழக முதல்வர் ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் கலந்துகொள்வதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கென நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் நிகழ்ச்சி அரங்கமும் அமைக்கப்பட்டு வருகிறது. இருமாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால் இங்கு சாலை சீரமைப்பு பணிகளும் வேகம் எடுத்துள்ளன.

இந்நிலையில் அகில பாரத இந்து மகாசபா உள்ளிட்ட இந்து அமைப்பினர், “தோள் சீலைப் போராட்டத்தின் 100, 150வது விழாக்கள் நடைபெறவில்லை. இப்போது இதை நடத்தி மக்களுக்குள் சாதி மோதல்கள் ஏற்படுத்தப் பார்க்கின்றார்கள். இதை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும் ”என வலியுறுத்தியுள்ளன.

இதேபோல் நாடார் அமைப்புகள் குமரி ஆட்சியர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து, “நாடார்கள் வரலாறு மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளை கேள்விக்குள்ளாக்கும்வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலும் இப்படி ஒரு பாடம் சேர்க்கப்பட்டு, எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. அதற்கு கருணாநிதி, கனிமொழி, ராமதாஸ் ஆகியோர் நாடார்களுக்கு பக்கபலமாக நின்றனர். கி.பி 1810 வரை நாடார்கள் அரசர்களாகவும் இருந்தனர். இப்போது நாடார் வரலாற்றில் சேறுபூச முயல்கின்றனர். தமிழக, கேரள ,முதல்வர்கள் இந்நிகழ்வைப் புறக்கணிக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

மாநாடு குறித்த அறிவிப்பு
மாநாடு குறித்த அறிவிப்புதோள் சீலைப்போராட்டம் மாநாடு; ஸ்டாலின் பங்கேற்பா, புறக்கணிப்பா?: வலுக்கும் எதிர்ப்பால் குழப்பம்

அதேநேரம் அமைச்சர் மனோதங்கராஜ், முதல்வர் தோள் சீலை மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார் எனத் தொடர்ந்து கூறிவருகின்றார்.அதை உறுதிசெய்யும் வகையில் திமுகவினர் நிகழ்ச்சி மேடை தயாரிப்பு, திட்டமிடலில் அதிகக் கவனம் செலுத்திவரும் நிலையில் முதல்வரின் சுற்றுப்பயண விவரத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெறவில்லை.

எதிர்ப்பு காரணமாக முன்கூட்டியே அறிவுப்பு செய்யாமல் திடீர் விஜயமாக முதல்வர் வருவாரா? அப்படி முதல்வர் வராத பட்சத்தில் மேடை, சாலைப் பணிகளில் திமுகவினர் தீவிரம் காட்டுவது ஏன் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கும் இதுவரை விடை தெரியவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in