நாகை எம்.பி., செல்வராஜ் மரணம்... தலைவர்கள் இரங்கல்!

செல்வராஜ் எம்.பி
செல்வராஜ் எம்.பி

உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகை எம்பி செல்வராஜ் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

செல்வராஜ்
செல்வராஜ்

தற்போது நாகப்பட்டினம் தனி தொகுதியின் எம்.பியாக இருப்பவர் எம் செல்வராஜ். கடந்த 1989, 1996,1998 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும் இவர் இந்த தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இந்த முறை உடல் நலம் குறைபாடு காரணமாக தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகியான இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவில் சித்தமல்லி ஆகும். இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா காலத்தில் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது. அது தவிர அண்மையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

மக்களவையில் செல்வராஜ்
மக்களவையில் செல்வராஜ்

இந்தநிலையில் கடந்த மே 2ம் தேதி சென்னை மியாட்  மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சித்தமல்லிக்கு கொண்டு வரப்பட உள்ளது. நாளை காலை சித்தமல்லியில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in