திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு: பாஜகவின் வியூகம் வெல்லுமா?

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்கோப்புப் படம்

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் திரிபுராவுக்கு பிப்ரவரி 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவைகளிலும் தலா 60 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் மார்ச் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. மேகாலயாவில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள என்பிபி கட்சியின் கான்ராட் சங்மா முதல்வராக உள்ளார். நாகாலாந்தில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள என்டிபிபி கட்சியின் நெப்யூ ரியோ முதல்வராக உள்ளார். இந்த மாநிலங்களில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பலமாக உள்ளது. எனவே இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறுமா அல்லது எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் வெல்லுமா என்பது தற்போதைய எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. இந்த மாநிலங்களின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற பாஜக பல்வேறு வியூகங்களையும் வகுத்து உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in