நாகாலாந்தில் 5 வது முறையாக முதல்வராகும் நெய்பியூ ரியோ: முக்கிய எதிர்க்கட்சியாகும் தேசியவாத காங்கிரஸ் - முழு ரிசல்ட்

நெய்பியூ ரியோ
நெய்பியூ ரியோநாகாலாந்தில் 5 வது முறையாக முதல்வராகும் நெய்பியூ ரியோ: முக்கிய எதிர்க்கட்சியாகும் தேசியவாத காங்கிரஸ் - முழு ரிசல்ட்

நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக என்டிபிபி கட்சி வெற்றிபெற்றுள்ளதால், பாஜகவின் துணையுடன் நெய்பியூ ரியோ 5 முறையாக அம்மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ காஜெட்டோ கினிமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் என்டிபிபி-பாஜக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 12 தொகுதிகளிலும், என்டிபிபி கட்சி 25 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. எனவே இந்தக் கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல 5 தொகுதிகளில் வென்ற தேசிய மக்கள் கட்சி, 2 தொகுதிகளில் வென்ற குடியரசுக் கட்சி(அத்வாலே) ஆகியவை இக்கூட்டணிக்கு ஆதரவளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில் நாகாலாந்தில் முக்கிய எதிர்க்கட்சியாக 7 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், லோக் ஜனசக்தி(ராம்விலாஸ்) கட்சி 2 தொகுதியிலும், நாகா மக்கள் முன்னணி 2 தொகுதியிலும், சுயேட்சைகள் 4 தொகுதிகளிலும் வென்றுள்ளனர்.

இந்த தேர்தலில் என்டிபிபி கட்சி 32.22 சதவீத வாக்குகளையும், பாஜக 18.81 சதவீத வாக்குகளையும், என்சிபி 9.56 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. மேலும், லோக்ஜனசக்தி 8.65%, என்பிஎப் 7.09%, தேசிய மக்கள் கட்சி 5.78 சதவீதம், காங்கிரஸ் 3.55%, ஐக்கிய ஜனதா தளம் 3.25% வாக்குகளைப் பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in