இடைத்தேர்தல் வரவேண்டும் என மக்கள் நினைக்கும் நிலை வந்து விட்டது: சீமான் ஆதங்கம்

சீமான்
சீமான்இடைத்தேர்தல் வரவேண்டும் என மக்கள் நினைக்கும் நிலை வந்து விட்டது: சீமான் ஆதங்கம்

எங்க தொகுதி எம்எல்ஏ இறந்துவிட மாட்டாரா, இடைத்தேர்தல் வராதா என மக்கள் எதிர்பார்க்கும் நிலை வந்துவிட்டது, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த பணம் இல்லை என சொல்கிறார்கள். ஆனால், தேர்தல் வந்துவிட்டால் பணம் எங்கிருந்து தான் வருகிறது என தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

’’செஞ்சமர்’’ படத்தின் துவக்க விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக் கொண்டார். இவ்விழாவில் அவர் பேசுகையில், ‘’தமிழர்களுக்கு என்று இலக்கியச் சான்று உள்ளது ஆனால், வரலாற்று சான்றுகள் இல்லை. பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை நெடுந் தொடராக எடுக்க வேண்டும் என நானும், இயக்குனர் வெற்றிமாறனும் பேசி வருகிறோம் ஆனால், தற்போது அதற்கான அரசியல் சூழல் மற்றும் பொருளாதார சூழல் இல்லை.

ஒரு வேளை நீ முதலமைச்சராகி விட்டால், பணத்திற்கு என்ன செய்வாய் சீமான் எனக் கேட்பார்கள், இதற்கு முன்பு முதலமைச்சராக இருந்தவர்களிடம் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்பேன்.

மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த காசு இல்லை என்கிறார்கள் ஆனால், தேர்தல் வந்துவிட்டால் மட்டும் எங்கிருந்து தான் இந்த காசு வருகிறது எனத் தெரியவில்லை. மக்களை நினைத்தால் பாவமாக உள்ளது. ஸ்மார்ட் வாட்ச், செல்போன் வரை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்

எம்எல்ஏ எங்க ஊருக்கு வருவாரா, நல்லது செய்வாரா என எதிர்பார்த்தது போய் எங்க ஊர் எம்எல்ஏ எப்போ சாவாரு, எப்போது இடைத்தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மோசமாக போயிவிட்டதே என்பது வலி தான். இளைஞர்களுக்கு அரசியல் குறித்த புரிதல் வர வேண்டும். அருகில் இருக்கும் கேரளாவைப் பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in