நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்படுகிறது; விரைவில் கைதாவார்கள் - எல்.முருகன் எச்சரிக்கை!

மத்திய அமைச்சர் எல்.முருகன்
மத்திய அமைச்சர் எல்.முருகன் கோப்பு படம்

தேசத்தின் ஒற்றுமை மற்றும் தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதை என்.ஐ.ஏ ஆய்வு காட்டி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தார்.

சீமான்
சீமான்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், “ தேசத்தின் ஒற்றுமை மற்றும் தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சியின் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதை என்ஐஏ ஆய்வு காட்டி கொடுத்துள்ளது. இதுவரை, தமிழக காவல்துறையினர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்ஐஏ அவர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்த பிறகு, நாட்டிற்கு எதிராக செயல்கள் செய்திருப்பதை உறுதிப்படுத்திய பிறகு கைது செய்ய இருக்கிறார்கள். என்ஐஏ என்பது தேசத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது.

.

 மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

இந்த நாட்டை பாதுகாக்கும் மிக முக்கியமான அமைப்பு தேசிய புலனாய்வு முகமை. அந்த அமைப்பு அவர்களது வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. தவறு செய்பவர்களிடம் கேள்வி கேட்கும் போது, 'என்னை மிரட்டுகிறார்கள்' என அலறுவார்கள். அதைத்தான் இப்போது தவறு செய்தவர்கள் (சீமான்) செய்கிறார்கள்" என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in