எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த மர்ம நபர்: மதுரையில் பரபரப்பு

எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த மர்ம நபர்: மதுரையில் பரபரப்பு

மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சி காலத்தில் தந்தை பெரியார், அம்பேத்கர், திருவள்ளுவர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு காவி சாயம் அடிப்பது, காவித்துண்டு அணிவது உள்ளிட்ட செயல்களில் பாஜகவினரும், இந்து கட்சியினரும் செயல்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் பாஜக நிர்வாகிகளும், இந்து அமைப்பினரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அண்மையில் அம்பேத்கர் சிலைக்கு காவி சாயம் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த அதிமுகவினர் அந்தப் பகுதியில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. எம்ஜிஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவித்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in