ஆளுநர் மாளிகையில் வானில் இருந்து விழுந்த மர்மப்பொருள் : நள்ளிரவில் நடந்த திக் திக் சோதனை

ஆளுநர் மாளிகையில் வானில் இருந்து விழுந்த மர்மப்பொருள் : நள்ளிரவில் நடந்த திக் திக் சோதனை

சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு வானில் இருந்து விழுந்த மர்மப்பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் உள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையும் ஒன்று. சுமார் 157 ஏக்கர் பரப்பளவில் ஆளுநர் மாளிகை அமைந்துள்ளது. தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் ஆரம்பித்தில் இருந்தே முட்டலும், மோதலுமாக உள்ளது. ஆர்எஸ்எஸ் கொள்கைப் பிடிப்புக் கொண்ட ஆளுநர், தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு அனுமதி தராமல் இழுத்தடிப்பதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்திலேயே திமுக புகார் கூறியது.

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதிய கல்விக்கொள்கைத் தேவை என்று தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் மாளிகையின் , முக்கிய விருந்தினர்கள் தங்கும் இல்லம் அருகே நேற்று இரவு விளக்கு எரிந்த நிலையில் ஒரு மர்மப் பொருள் பறந்து வந்து விழுந்தது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு ரோந்து காவலர்கள் சென்னை மாநகர போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்த போலீஸார், அந்த மர்மப் பொருளை தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அது வெடிகுண்டு இல்லை என தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வானிலை ஆய்வுக்காக பறக்கவிடப்பட்ட சென்சார் பொருந்திய பலூன் என்றும், அது காற்றின் வேகம் குறைந்ததால் ஆளுநர் மாளிகை மைதானத்தில் விழுந்தது தெரியவந்தது. நள்ளிரவில் நடந்த இந்த சோதனையால் ஆளுநர் மாளிகையில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in