‘எனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இந்த பொருட்களையெல்லாம் கைப்பற்றினர்’ - பட்டியலிட்ட மணீஷ் சிசோடியா!

‘எனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இந்த பொருட்களையெல்லாம் கைப்பற்றினர்’ - பட்டியலிட்ட மணீஷ் சிசோடியா!

14 மணி நேரம் நடந்த சோதனைக்குப் பிறகு, சிபிஐ அதிகாரிகள் தனது கணினி, மொபைல் போன் மற்றும் சில கோப்புகளை கைப்பற்றியதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புதிய கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி லெப்டினட் கவர்னர் வி.கே.சக்சேனா அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் 30 இடங்களில் சிபிஐ நேற்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனை நடத்தியது.

சோதனை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, “சிபிஐ குழு எனது வீட்டை சோதனை செய்து கணினி மற்றும் செல்போனைக் கைப்பற்றினர். எனது குடும்பத்தினர் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர், தொடர்ந்து ஒத்துழைப்போம். நாங்கள் எந்த ஊழலோ, தவறோ செய்யவில்லை. அதனால் நாங்கள் பயப்படவில்லை. சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

டெல்லி அரசின் நல்ல செயல்களை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிபிஐ என்னை விசாரணைக்கு அழைக்கவில்லை. எனது கணினி, போன் மற்றும் சில கோப்புகளை சிபிஐ கைப்பற்றியுள்ளது. இந்த சோதனையின் போது சிபிஐ அதிகாரிகள் நன்றாக நடந்து கொண்டனர்” என தெரிவித்தார்.

முன்னதாக நேற்று விசாரண நடத்தப்பட்ட போது, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா இருவரும், ‘வெல்கம் சிபிஐ’ என ட்வீட் செய்திருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in