என் தம்பி வீட்டில் ரெய்டு நடந்தது, என் வீட்டில் நடக்கவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிஎன் தம்பி வீட்டில் ரெய்டு நடந்தது, என் வீட்டில் நடக்கவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை. எனது தம்பி மற்றும் அவருக்குத் தெரிந்தவர்கள் தொடர்புடைய இடங்களில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை நடக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையின் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ரெய்டு நடக்கும் இடங்களில் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் வருமானவரி சோதனையின் போது திமுகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வருமான வரித்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், " சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகளில் சோதனை நடக்கவில்லை. எனது தம்பி மற்றும் அவருக்குத் தெரிந்தவர்கள் தொடர்புடைய இடங்களில் மட்டுமே வருமானவரித்துறை சோதனை நடக்கிறது"என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in