அன் லிமிடெட் மட்டன் பிரியாணி, சிக்கன் 65... திமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு தடபுடல் விருந்து!

அன் லிமிடெட் மட்டன் பிரியாணி, சிக்கன் 65... திமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு தடபுடல் விருந்து!

மட்டன் பிரியாணி, சிக்கன் 65 என திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் புதிய நிர்வாகிகள் தடபுடல் அசைவ விருந்து கொடுத்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அசத்தியுள்ளார்.

சென்னை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தொகுதி அமைப்பளர், மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை சந்தித்த அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக ஐடி விங் நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். 2வது நாளாக இன்று நடைபெற்ற, சோஷியல் மீடியாவில் தீவிரமாக செயல்படும் திமுக ஆதரவு தன்னார்வலர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசி ஆலோசனைகளை வழங்கிவிட்டுச் சென்றார்.

அதன் பின்னர் நடைபெற்ற மதிய விருந்தில் அன் லிமிடெட் பஃப்பே முறையில் மட்டன் பிரியாணி, கேட்கக் கேட்க எவ்வளவு வேண்டுமானாலும் சிக்கன் 65, கூடவே ஸ்வீட்ஸ் என அமர்களமாக அசைவ விருந்துக் கொடுத்து அசத்தியிருந்தார் திமுக ஐடி விங் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா. நேற்றும் இன்றும் இரண்டு நாட்களுமே மட்டன், சிக்கன் என வகைவகையாக அசைவ விருந்து கொடுத்திருக்கிறார்.

மதிய விருந்தோடு திமுக ஐடி விங் நிர்வாகிகளை அனுப்பிவைக்காமல் குடை, ஸ்டீல் வாட்டர் பாட்டில், டிராவல் பேக், புத்தகங்கள் என ஏராளமான பரிசுப் பொருட்களையும் நிர்வாகிகளுக்கு கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா. 2 நாள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் திமுக ஐடி விங் நிர்வாகிகள் குஷியோடு ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in