எங்களையும் திமுக கூட்டணியில் சேர்த்துக்கோங்க... ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் கோரிக்கை

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன், தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன்
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன், தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன்
Updated on
2 min read

தேசிய அளவிலான இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியை, தமிழகத்திலும் இணைத்துக்கொள்ள வேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் வசீகரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து டெல்லியில், இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன் பங்கேற்றுவிட்டு நேற்று மாலை சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் வசீகரனுக்கு கட்சியினர் வரவேற்பு
சென்னை விமான நிலையத்தில் வசீகரனுக்கு கட்சியினர் வரவேற்பு

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”உலகத்திலேயே இந்தியாவை ஊழல் நிறைந்த நாடாக கடந்த 10 ஆண்டுகளாக, பாஜக மாற்றி வந்தது, தேர்தல் நேரத்தில் அம்பலமாகி இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலமாக மோடி ரூ.8,252 கோடி கொள்ளையடித்துள்ளார். மத்திய அரசின் சிஏஜி அறிக்கையில் கூட ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் செய்யப்பட்டு இருப்பதாக கூறி உள்ளது. இதை எல்லாம் தாண்டி ரூ.12,700 கோடி பி.எம்., கேர் திட்டத்தில் வசூலித்துள்ள ஊழல் வெளிவந்துள்ளது. இந்த ஊழலை மறைக்க அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்து உள்ளனர். கடந்த ஒராண்டாக அவர் மீது ஆதாரம் இல்லாத நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார்.

சென்னை விமான நிலையத்தில் வசீகரனுக்கு கட்சியினர் வரவேற்பு
சென்னை விமான நிலையத்தில் வசீகரனுக்கு கட்சியினர் வரவேற்பு

மேலும், “வடமாநிலங்களில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் மோடி உள்ளார். ராகுல் காந்தியுடன் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்வதை தடுக்கவே கைது செய்யப்பட்டு உள்ளார். டெல்லியில் நடந்த கண்டன கூட்டம், இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்து உள்ளது. மோடி செய்த ஊழலை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணியை செய்ய வேண்டும். தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் திமுக, ஆம் ஆத்மி கட்சியை இணைத்து கொள்ளாமல் உள்ளது. எங்களையும் கூட்டணியில் திமுக பயன்படுத்தி கொள்ள வேண்டும். எங்களின் பிரச்சாரம் தமிழகத்தில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in