இந்தியாவைக் காப்பாற்றத் தயாராக இருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்இந்தியாவைக் காப்பாற்ற தயாராக இருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

’இந்தியாவை காப்பாற்ற அனைவரும் தயாராக இருக்க வேண்டும்; நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை விரைந்து செய்திட வேண்டும்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவலாயத்தில், திமுக விவசாய அணி துணைச் செயலாளர் நல்லசேதுபதி இல்லத் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்த விழாவில் பேசிய அவர், ‘’1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா பொறுப்பேற்றப் பிறகுதான் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என திமுகவினர் நினைக்க வேண்டும். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டிகளை நாம் அமைக்க வேண்டும். அதனை சரியாகச் செய்தால் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும்.

நிதிநிலைமை மற்றும் மத்திய அரசு நமக்கு துணை நிற்காவிட்டாலும், அதெல்லாம் மீறி நாம் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக, நம்பர் 1 முதல்வர் என்ற பெருமையை பெறும் அளவிற்கு நாம் வளர்ந்து வந்துள்ளோம். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்காமல் இருந்தாலும் சிறந்த மாநிலமாக வளர்ந்துள்ளோம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in