`ராஜேந்திர சோழனை போற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியம்'- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

`ராஜேந்திர சோழனை போற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியம்'- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

``ராஜேந்திர சோழனின் பெருமையைப் போற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்'' என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மாவட்டத்திற்கான ரூ.30.26 கோடி செலவில் 51 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.1.56 கோடி மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய முதல்வர், “தமிழகத்தின் வரலாற்றுக் கருவூலமான அரியலூரில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறோம். அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் வாயிலாக 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழினுடைய தொன்மையையும், தமிழ்ச் சமூகத்தினுடைய பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் தொல்லியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறோம்.

நேற்று கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் நடைபெறக் கூடிய அகழாய்வு பணிகளையெல்லாம் நாங்கள் நேரடியாக போய் பார்வையிட்டோம். கங்கை கொண்ட சோழன், உத்தம சோழன், வீர சோழன் போன்ற பட்டங்களுக்கு சொந்தமான சோழ மன்னர் ராஜேந்திர சோழர், தெற்காசிய நாடுகளை வென்று அரியலூரில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர். தனது ஆட்சிக்காலத்தில் கடல்கடந்து போர் புரிந்து பல நாடுகளை வெற்றி கொண்டதோடு, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வணிகமும் செய்தவர். இத்தகைய பெருமை வாய்ந்த ராஜேந்திர சோழனுக்குப் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் கடல் பயணம், கடல் வணிகம் மற்றும் கப்பல் கட்டக் கூடிய தொழில் நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும், மேலை நாடுகளுடன் கீழை நாடுகளும் சிறந்து வணிகத் தொடர்பு கொண்டிருந்ததைப் பறைசாற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in