`தாவல் திலகம் குஷ்புவுக்கு நாவடக்கம் தேவை’- முரசொலி காட்டம்!

`தாவல் திலகம் குஷ்புவுக்கு நாவடக்கம் தேவை’- முரசொலி காட்டம்!

நடிகையும் பாஜக பிரமுகரான குஷ்பு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது.

முரசொலியில் வெளியான கட்டுரையில், “பாஜக சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ‘தாவல் திலகம்’ குஷ்பு அவர்கள், ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தைப் பற்றிப் பேசாமல் தனது வாய்த்துடுக்கைக் காண்பித்துள்ளார். அந்த அம்மையார் அரசியலில் ஈடுபட்ட குறைந்த காலத்தில் நிறையக் கட்சிகளுக்குத் தாவியதால், “தாவல் திலகம்’ என்ற பட்டம் பொருத்தமாக இருக்கும். முதல்வரை விமர்சித்ததோடு அல்லாமல், மின்கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது. பால் கட்டண உயர்வால் வயிறு எரிகிறது எனத் துடித்துத் துவண்டுள்ளார். ஒன்றிய அரசு பெட்ரோல் விலை, சமையல் காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி என விலைவாசி ஏறியபோதெல்லாம் எரியாத வயிறு, ஏழைகளைப் பாதிக்காத வகையில் பால் விலையை ஏற்றிய போது கண்டு எரிகிறதாம். தமிழகத்தில் 200 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்துபவர்களுக்கு கட்டண உயர்வுக்குப் பிறகு மொத்தமாகவே ரூ.225லிருந்து ரூ.275 தான் வருகிறது. இந்த கட்டண உயர்வுக்கே அவருக்கு வயிறு எரிகிறது என்றால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கட்டணத்தைப் பார்த்தால் எதெல்லாம் எரியுமோ?

திமுக பேச்சாளர் ஒருவர், குஷ்பு குறித்துப் பேசுகையில் குறிப்பிட்ட சில வார்த்தைகள், அவரைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டபோது, அந்தப் பேச்சாளர் கண்டிக்கப்பட்டார். அதற்கு அவர் வருத்தமும் தெரிவித்திருந்தார். கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி அந்த பேச்சுக்குக் கண்டனமும் தெரிவித்திருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலினும், மேடையிலிருந்த அமைச்சரும் மன்னிப்பு கோர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அன்றைக்குத் தேசியச் செயலாளராக இருந்த எச்.ராஜா அவர்கள் குஷ்பு குறித்து அருவருக்கத்தக்க பேச்சுகள் இன்று வைரலாகப் பரவி வருகிறது. அதற்கு இன்னும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. இதற்கு அமித்ஷாவும், பிரதமர் மோடியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என குஷ்பு கேட்பாரா? அல்லது இனியாவது கேட்பாரா?” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in