
சென்னையில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கிய நிலையில், வடசென்னை பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மிகுந்த சிரமத்திற்குள்ளானதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் நேற்று காலையில் இருந்து விட்டு விட்டு நல்ல மழை பெய்தது. குறிப்பாக இரவு 9 மணி அளவில் பெய்ய தொடங்கிய கனமழை ஒரு மணிநேரத்திற்கு மேலாக நீடித்தது. மீண்டும் நள்ளிரவில் இடி மின்னலுடன் சென்னை முழுவதும் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து காலை வரை நீடித்துக் கொண்டே வந்தது.
இதனால் வடசென்னை திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், ஆர்.கே நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் குளம்போல தேங்கியுள்ளது. குறிப்பாக ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட இள தெரு, வ.உ.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் வீடுகளிலும் புகுந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
அங்குள்ள பிரதான சாலைகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு மழைக்கும் மழைநீர் தேங்குவது வாடிக்கையாகி உள்ளது என்றும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், முதல்வர் அவர்கள் தென்சென்னை பக்கம் மட்டுமே இருக்கு அதிகாரிகளை வடசென்னை பக்கம் திருப்பிவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
தீபாவளி போனஸ்... ஊழியர்களுக்கு கார்களை பரிசாக தந்த நிறுவன உரிமையாளர்!
நாளை கடைசி தேதி : ரூ.62,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
சென்னையில் பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்!
9வகுப்பறையில் சுருண்டு விழுந்த 9-ம் வகுப்பு மாணவி... மாரடைப்பால் பலியான சோகம்!