ஒரே நாளில் திடீரென பதவி விலகிய 2 மத்திய அமைச்சர்கள்: என்ன காரணம் தெரியுமா?

ஒரே நாளில் திடீரென பதவி விலகிய 2 மத்திய அமைச்சர்கள்: என்ன காரணம் தெரியுமா?

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தனது அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக செயல்படும் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக முக்தர் அப்பாஸ் நக்வி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்தர் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. கடந்த மாதம் பல மாநிலங்களில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் முக்தர் அப்பாஸ் நக்வி எந்த மாநிலத்தில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படாத காரணத்தால் அப்போதே அவர் துணை ஜானதிபதி பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் மத்திய உருக்குத்துறை அமைச்சர் ஆர்.சி.பி.சிங்கும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில் அவர் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். உட்கட்சி பிரச்சினை காரணமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் ஆர்.சி.பி.சிங்கிற்கு மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பினை வழங்கவில்லை என சொல்லப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in