
தமிழக ஆளு நர் ஆர்.என்.ரவி கையால் பட்டம் வாங்க மறுத்த பேராசிரியர்கள் இருவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் மதுரை எம்பி சு.வெங்கடேசன்.
சுதந்திர போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்பு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோப்பில் கையெழுத்திட ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். பல்கலைக்கழக பேராசிரியர்களான சுரேஷ், ரமேஷ் குமார் ஆகியோர் ஆளுநரின் கையால் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தனர். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெகுவாக பாராட்டினார்.
தனது ட்விட்டர் பதிவில், "விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த பேரா.சுரேஷ், பேரா. சி.ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பேராசிரியர்கள் சுரேஷ், ரமேஷ் குமார் ஆகியோரை எம்பி சு.வெ நேரில் சந்தித்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது தொடர்பான தனது ட்விட்டர் பதிவில், “விடுதலை போராட்ட மாண்பையும், பல்கலைக்கழகத்தின் உரிமையையும் அவமதிக்கும் விதமாகவும் நடந்து கொண்டார் ஆளுநர் இரவி. எனவே அவர் பங்கெடுத்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை செனட் உறுப்பினர்கள் 73 பேரில் 45 பேர் புறக்கணித்துள்ளனர். இது இந்தியப்பல்கலைக்கழக வரலாற்றின் மகத்தான போராட்டமாகும்.
தங்களின் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பேரா. சுரேஷ், பேரா. ரமேஷ்ராஜ் இருவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். கல்விக்கழகு கசடுகளை புறந்தள்ளல்” என பேராசிரியர்களுக்கு வாழ்த்தும், ஆளுநருக்கு சாடலுமாக சு.வெங்கடேசன் இன்று பதிவிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!
கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!
மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!
அதிர்ச்சி... ஐஐடி வளாகத்தில் மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை!