இதோட நிறுத்திக்கோங்க... மதுரை அதிமுக வேட்பாளருக்கு சு.வெங்கடேசன் கடும் எச்சரிக்கை!

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் பரப்புரையில் சு.வெங்கடேசன்
தேர்தல் பரப்புரையில் சு.வெங்கடேசன்

மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சு.வெங்கடேசன், அதிமுக சார்பில் டாக்டர் சரவணன், பாஜக சார்பில் ராம சீனிவாசன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சத்தியதேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மதுரையில் போட்டியிட்டு வென்ற சு.வெங்கடேசனுக்கு மீண்டும் இந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மதுரை தொகுதிக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்த புத்தகத்தையும் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ளார்.

பைனாகுலருடன் டாக்டர் சரவணன்
பைனாகுலருடன் டாக்டர் சரவணன்

நாடாளுமன்றத்தில் மாநில மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கான குரல் கொடுத்த சு.வெங்கடேசன், தொகுதி மக்களிடையே நல்ல பெயரை வாங்கி வைத்துள்ளார். மதுரை தொகுதியில் மற்ற வேட்பாளர்களுக்கு களத்தில் மிகவும் 'டப்' கொடுத்து வருகிறார். அதனால், அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன், தேர்தல் பிரச்சாரத்தில் சு.வெங்கடேசன் இமேஜை டேமேஜ் செய்து, தன்பக்கம் மக்களை ஈர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். முக்கியமாக, சு.வெங்கடேசன் செய்த ஏதாவது நல்ல விஷயம் இருக்கா என்று பைனாகுலரில் தேடி பார்க்கிறேன் என்று பைனாகுலர் லென்ஸ் மூடியை கழட்டாமல் பேசி கிண்டலுக்கு உள்ளானார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் ட்ரோல் ஆனது.

சு.வெங்கடேசன் அறிக்கை
சு.வெங்கடேசன் அறிக்கை

இந்நிலையில், மதுரை எம்.பி நிதி ரூ.17 கோடி ஒதுக்கீடு இருந்தும் ரூ.5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று டாக்டர் சரவணன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்தும், மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், எம்.பி நிதி ரூ.17 கோடியில் ரூ.16.96 கோடி செலவு செய்து 245 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்களிடையே சொல்வதற்கு எந்த திட்டங்களும் இல்லாததால், அவதூறுகளை அதிமுக வேட்பாளர் பரப்பி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in