ஜூன் 10-ம் தேதி மாநிலங்களவை எம்.பி தேர்தல்!- தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி இடங்களுக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ராஜ்யசபா
ராஜ்யசபா

தமிழ்நாட்டில் 6 நியமன எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. அதுபோல் மகாராஷ்டிராவில் 6 எம்.பி பதவிகளும், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 11 எம்பி பதவிகளும் காலியாக உள்ளன. இது போல் ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளன. இந்தப் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் காலியாக இருக்கும் 6 எம்.பி பதவிகளுக்கு திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 123 இடங்கள் தேவைப்படும். இந்த நிலையில் தற்போது பாஜகவிற்கு 101 எம்பிகள் இருக்கிறார்கள்.

மே 24-ம் தேதி ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும். மே 24ம் தேதி வேட்பு மனு செய்யக் கடைசி நாள், ஜூன் 1-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூன் 3-ம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். ஜூன் 10-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்போது, கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும், இதை உறுதி செய்யும் வகையில் மாநில அளவில் ஒரு மூத்த அதிகாரியை நியமிக்குமாறு சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட தலைமைச் செயலாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in