உதயநிதிக்கு அமைச்சர் பதவி: என்ன சொல்கிறார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்?

உதயநிதிக்கு அமைச்சர் பதவி: என்ன சொல்கிறார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்?

``திமுகவின் அசையும் சொத்து என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை'' என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா என முப்பெரும் விழா மதுரை புதூர் பகுதியில் திமுக சார்பில் நேற்று நடந்தது. இதில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் கலந்து கொண்டு பேசுகையில், ``மக்களின் சராசரி வயது 35 அல்லது 36 ஆக உள்ளது. திமுக உறுப்பினர்களின் வயது,  இடைவெளியை குறைக்க,  இளைஞர்களை ஈர்க்க  இளைஞரணி செயலாளர், அமைச்சர்  பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் வருகை  திமுகவின் எதிர்காலத்திற்கு நல்லது. கட்சியில்  பதவி உயர்வு, அமைச்சரவையில்  அவருக்கு இடம்  வழங்கப்பட்டது. கட்சியின் அசையும் சொத்து அவர்.  பாசம்,  பரஸ்பர உரிமையுடன் என்னோடு  நெருங்கி  பழகுபவர்.

அவரது  பணியில் தேவையான முன்னேற்றங்களுக்கு அண்ணன் என்ற முறையில் என்னால் என்ன முடியுமோ அதை  நான் செய்து தருவேன். எனக்கு எத்தனையோ பதவி வந்தாலும், பண்பாளர் பிடிஆரின் மகன் என்பது தான்  எனது பிரதான  அடையாளம். அதற்கு மேல் யாரும் எனக்கு எந்த உதவியும் கொடுக்கவும்,  எடுக்கவும் முடியாது. அனைத்து மதங்களின் நல்ல கருத்துகளை நான்  பின்பற்றுபவன்'' என்றார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in