குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்: அதிர்ச்சி தரும் அறிக்கை

குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்: அதிர்ச்சி தரும் அறிக்கை

அடுத்த மாதம் நடைபெறவுள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளர்களில் 330 பேர் (சுமார் 20 சதவீதம்) பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்துள்ளது.

குஜராத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மீதான கிரிமினல் வழக்குகள் கணக்கெடுப்புக்குப் பிறகு ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தப் பட்டியலில் 61 வேட்பாளர்களுடன் ஆம் ஆத்மி கட்சி முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸின் 60 வேட்பாளர்கள் மற்றும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் 32 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 96 பேர் உட்பட மொத்தம் 192 வேட்பாளர்கள் மீது கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி தொடர்பான கடுமையான குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏடிஆர் தெரிவித்துள்ளது.

கிரிமினல் வழக்குகள் உள்ள 330 வேட்பாளர்களில், முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் மொத்தமுள்ள 788 வேட்பாளர்களில் 89 இடங்களில் போட்டியிடும் 167 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் மொத்தமுள்ள 822 வேட்பாளர்களில் 93 இடங்களில் போட்டியிடும் 163 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

கடுமையான குற்றங்களைச் செய்த வேட்பாளர்களைப் பொறுத்த வரையில், ஆம் ஆத்மி கட்சி 43 பேருடன் முதலிடத்திலும், காங்கிரஸ் 28 பேருடன் 2ம் இடத்திலும், பாஜக 25 பேருடன் 3ம் இடத்திலும் உள்ளன. ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் முறையே 181, 179 மற்றும் 182 வேட்பாளர்கள் குஜராத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஏடிஆர் அமைப்பு கடுமையான குற்றங்களை ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களாக வரையறுக்கிறது, இது அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட தண்டனைகளை வழங்குகிறது. இவை தாக்குதல், கொலை, கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஊழல் வழக்குகள் போன்ற குற்றங்கள் ஆகும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 18 வேட்பாளர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு வேட்பாளர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளது. ஐந்து பேர் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளன, மேலும் 20 பேர் கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ஷெஹ்ரா தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் ஜெதா பர்வாத் மீது பாலியல் வன்கொடுமை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைத்தல் போன்ற வழக்குகள் உள்ளன.

அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தஸ்க்ரோய் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் கிரண் படேல் மீது கொலை வழக்கு உள்ளது. பதான் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கிரித் படேல் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் குற்ற வழக்குகள் உள்ள மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 238 ஆக இருந்தது. தற்போது இது கணிசமாக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in