அதிகம் நன்கொடை பெற்ற மாநிலக் கட்சிகள்: திமுகவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

அதிகம் நன்கொடை பெற்ற மாநிலக் கட்சிகள்: திமுகவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

நாட்டிலேயே அதிகபட்ச நன்கொடை பெறும் மாநில கட்சிகளில் திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.

கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் தேர்தல் ஆணையத்தில் அந்தந்த கட்சிகள் தாக்கல் செய்த நன்கொடை குறித்த தகவல்களின் அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பீகாரை சேர்ந்த ஜக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இந்த காலகட்டத்தில் ரூ.60.15 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. 58 தொழில் நிறுவனங்களிடம் இருந்து ரூ.59.24 கோடி, 272 தனி நபர்களிடமிருந்து ரூ.90 லட்சம் நன்கொடை இந்த கட்சிக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் மாநில கட்சிகளின் நிதீஷ் குமாரின் கட்சி முதலிடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 2020-21 காலகட்டத்தில் ரூ.33.99 கோடி ரூபாய் நன்கொடை பெற்று திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி ரூ.11.32 கோடி நன்கொடையுடன் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ரூ.4.16 கோடியுடன் 4 -ம் இடத்திலும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ரூ.4.15 கோடியுடன் 5 வது இடத்திலும் உள்ளன.

நாட்டில் உள்ள மொத்தம் 54 மாநில கட்சிகள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன. மாநிலக் கட்சிகள் அறிவித்த நன்கொடைகளின் மொத்தத் தொகை ரூ.124.53 கோடியாகும். ஒட்டுமொத்தமாக மாநிலக் கட்சிகளுக்கு 207 கார்ப்பரேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் ரூ.95.45 கோடி நன்கொடை அளித்துள்ளன. 2569 தனிநபர்கள் மாநிலக் கட்சிகளுக்கு ரூ.25.57 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.

மாநிலக் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடைகளில் 91.38 சதவீதம் அல்லது ரூ113.791 கோடியை முதலிடங்களில் உள்ள ஐந்து கட்சிகள் பெற்றுள்ளன. ஐக்கிய ஜனதா தளம், திமுக மற்றும் டிஆர்எஸ் ஆகிய கட்சிகளின் நன்கொடைகள் 2019-20 ம் ஆண்டினைவிட அதிகரித்துள்ளதாகவும், ஆம் ஆத்மி மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் நன்கொடை 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in