மழைக்கால கூட்டத்தொடரில் 24 மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்: எவையெவை தெரியுமா?

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

வரும் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 24 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் பத்திரிக்கைகளின் பதிவு மசோதா, கன்டோன்மென்ட் மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, திவால் மற்றும் திவால் குறியீடு திருத்த மசோதா உள்ளிட்ட 24 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

காஃபி மேம்பாடு மசோதா, நிறுவனங்கள் மற்றும் சேவைகள் மையங்களின் மேம்பாட்டு மசோதா, பொருட்களின் புவியியல் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்பு திருத்த மசோதா, கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, போட்டி திருத்த மசோதா, பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் திருத்த மசோதா, கலாக்ஷேத்ரா அறக்கட்டளை திருத்த மசோதா, பழைய மானிய ஒழுங்குமுறை மசோதா, வன பாதுகாப்பு திருத்தம் மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, தேசிய நர்சிங் மற்றும் பேறுகால பணியாளர் ஆணைய மசோதா, இந்திய மேலாண்மை நிறுவன திருத்த மசோதா மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா ஆகியவை இந்த கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் ஒழுங்குமுறை திருத்த மசோதா, ஆற்றல் பாதுகாப்பு திருத்த மசோதா, நபர்களை கடத்தல் (பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா மற்றும் குடும்ப நீதிமன்றங்கள் திருத்த மசோதா ஆகியவையும் இந்த அமர்வின் போது அறிமுகத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாட்டிற்கான பட்டியலிடப்பட்ட சாதிகள் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) பட்டியலை திருத்துவதற்கான அரசியலமைப்பு திருத்தத்திற்கான இரண்டு தனி மசோதாக்களும் அறிமுகத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தொடரின் போது ஆளுநர்கள், முதல்வர்கள், மாநில அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். ஞாயிற்றுக்கிழமையன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முந்தைய அனைத்துக் கட்சிக் கூட்டமும், எதிர்க்கட்சிகளின் கூட்டு வியூகக் கூட்டமும் நடைபெற உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in